கப்யாஸம் புண்டரீகம்


ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாக தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி” என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார்.

சாந்தோக்ய உபநிஷத்தில்
ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்று இருக்கிறது.

கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போல சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார்.

இதை கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், “இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்” என்று பொருள் என்றாராம்.

sooryanaaraayana dhyaana slokam.

த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: I
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரீ ஹிரண்யவபு: த்ருத சங்க சக்ர: II

சூரிய மண்டலத்தில் உறைபவர்; தாமரை மலரில் எழுந்தருள்பவர்; கேயூரம், மகர குண்டலங்கள், கிரீடம், மாலை போன்றவை தரித்தவர்; பொன்னிறத் திருமேனி படைத்தவர்; சங்கு சக்கரங்களைத் தாங்கியவர். அந்த சூரிய நாராயணரை எப்போதும் தியானிப்போம்.)

( Credits to Vaishnava Pandit Shri Saroja Ramanujam )

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *