
கோவிந்தன் குணம் பாடி – கோதை தமிழில் கோவிந்தனின் குணங்கள் – பதிவு 4 லக்ஷ்மிபதியான எம்பெருமான், அனைத்து நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன். ஸமஸ்த்த கல்யாண குணங்களுக்கு பரிபூரணனாக இருப்பவன் ஸ்ரீமந்நாராயணன். கோலச்சுரிசங்கு ஆகிய பாஞ்ச ஜன்யத்தை நோக்கி, மாயன் கண்ணபிரானுடைய சிவந்த திருஅதரத்தின் அதிசய குணத்தைச் சொல்லுமாறு கேட்கும் தன்மையுடையவள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். ‘தேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன்” என நாச்சியார் திருமொழியில் அருளிச்செய்தாள் ஸ்ரீ […]