Stories


ஒரு நாள்… யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதையின் அருகிலேயே இருந்தான் கண்ணன். அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில்லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டிப் பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன். ‘‘அம்மா! இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும்கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான். […]

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை!


ஸ்ரீராமஜெயம் முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்: ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக்கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து “அம்மா!’ என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் “”ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள். முதன் முதலில் “ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தை எழுதியவர் […]

ஸ்ரீராமஜெயம்


1
துருவன் கதை ஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான். துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று […]

துருவ சரித்திரம்


1
காளிங்க நர்த்தனா கோவிந்தா! கார்முகில் வர்ணா கோவிந்தா! ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]

காளிங்க நர்த்தனா கோவிந்தா!



வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்


1
ஒரு சமயம் கண்ணன் எங்கோ சென்று விட்டான். அவனது தாய் யசோதைக்கு கூட அவன் எங்கு சென்றுள்ளான் என்பது பற்றிய தகவல் தெரியாமல் போயிற்று. இந்த சின்னக்கண்ணன் எங்கே போய் விட்டான், என வருந்தினாள். சட்டென ராதையின் நினைவு அவளுக்கு வந்தது. ராதாவிடம் கேட்டால், அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயவன் எங்கும் போக மாட்டான். அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள் ராதை மட்டுமே. கண்ணன் இல்லாவிட்டால் ராதை இல்லை. எனக்கருதியவள் […]

யசோதா தேடிய கண்ணன்