
ராதை தன் மீது கொண்ட அன்பை, அவள் பாவத்திலேயே ரசித்திட விரும்பினார் கிருஷ்ணர். அதனால் ராதையின் தங்கநிறத்தோடு சைதன்யராய்ப் பிறந்தார் என்று சொல்வர். கண்ணனுக்காக ஏங்கும் ராதை மனது! எனவேதான் அவருக்கு கிருஷ்ண தியானம் அதிகம். சைதன்யர் கங்கைக் கரைக்குச் சென்று கேசவபாரதி என்பவரி டம் சந்நியாச தீட்சை பெற்ற போது, அவருக்கு “ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்ற பெயரைச் சூட்டினார். அடிக்கடி ராதா- கோபியர் பாவத்தில் திளைத்து மூர்ச்சையுறுவார். பலமணிநேரம் சுயநினைவுக்கு வரமாட்டார். (நம்மாழ்வார் பரந்தாமனை பற்றி எழுதும்போது மூர்ச்சையாவது போல) ஒருமுறை பூரி […]