கிருஷ்ண சைதன்ய மகாபிரபு 2


ராதை தன் மீது கொண்ட அன்பை, அவள் பாவத்திலேயே ரசித்திட விரும்பினார் கிருஷ்ணர். அதனால் ராதையின் தங்கநிறத்தோடு சைதன்யராய்ப் பிறந்தார் என்று சொல்வர்.

கண்ணனுக்காக ஏங்கும் ராதை மனது! எனவேதான் அவருக்கு கிருஷ்ண தியானம் அதிகம்.

சைதன்யர் கங்கைக் கரைக்குச் சென்று கேசவபாரதி என்பவரி டம் சந்நியாச தீட்சை பெற்ற போது, அவருக்கு “ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்ற பெயரைச் சூட்டினார்.

அடிக்கடி ராதா- கோபியர் பாவத்தில் திளைத்து மூர்ச்சையுறுவார். பலமணிநேரம் சுயநினைவுக்கு வரமாட்டார். (நம்மாழ்வார் பரந்தாமனை பற்றி எழுதும்போது மூர்ச்சையாவது போல)
ஒருமுறை பூரி சென்ற சைதன்ய மகாபிரபு, ஜெகந் நாதரைக் கண்டதும் மயங்கிவீழ்ந்தார். பின்னர் ஒருநாள் பூரி கடற்கரைக்குச் சென்ற போது கடலின் வண்ணத்தில் கண்ணனைக் கண்ட அவர் அதில் விழுந்துவிட்டார். ஒரு மீனவனின் வலையில் சிக்கி அவர் மேலே வந்தபோதும் அவர் இன்னும் தியான நிலையிலேயே இருந்தார். என்னே வினோதம்!

“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே”
என்னும் பகவத் நாமத்தைப் பரப்பியவர் ஸ்ரீசைதன்யர்.

ராதே ! ராதே ! ராதே ! ராதே !
ராதே கோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !

Chaitanya2


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 thoughts on “கிருஷ்ண சைதன்ய மகாபிரபு