திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
#கோதை_தமிழ்மாலை – கூடியிருந்து குளிர் மாலை
“நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்”
பாசுரம் ![]()
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம் ![]()
பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்
பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்
அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை, தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம்.
அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.

Thiruppavai Pasuram 27 – Meaning
O Govinda who brings disparate hearts together!
See what fortunes we have gained by singing your praise everywhere
Jewels of world-fame-sudakam-bangles; Tolvalai-amulets, todu-ear-rings;
Sevippoo – ear-tops, patakam-anklets and many other that we delight in wearing; clothes and finery then sweet milk-food served with ghee that flows down the elbow: together we shall sit and enjoy these in peace.
கோ(விந்)தா – ‘கோதா கோவிந்தனாக திருக்கோலம்’ – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ![]()
