திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் 8


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம்

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமுறை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ பேயாழ்வாரும் வந்து சேர்ந்தார்.

மூவர் நிற்கலாம் என்ற நோக்கத்துடன் ஸ்ரீ பொய்கையாரும், ஸ்ரீ பூதத்தாரும் ஸ்ரீ பேயாழ்வாரை வரவேற்று உபசரித்து மூவரும் சேர்ந்து எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களை நின்று கொண்டே ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து நின்றனர்.

இப்படி மூவரும் நின்று கொண்டிருக்கையில் நான்காவதாக எம்பெருமானும் அவ்விடத்தே வந்து நெருக்கத் தொடங்கினானாம்!!!

“நம்மை நெருக்குபவர் யார்? பெருமாளோ!?” என்று மூவரும் திகைத்து நிற்கையில், முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கை ஆழ்வார்

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக – வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை – இடராழி நீங்குகவே”
என்று தொடங்கி முதல் திருவந்தாதியை மங்களாசாசனம் பண்ணினார்.

அதனை அடுத்து ஸ்ரீ பூதத்தாழ்வாரும்
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக – இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு – ஞானத் தமிழ் புரிந்த நான்”
என்று தொடங்கி இரண்டாம் திருவந்தாதியைப் மங்களாசாசனம் பண்ணினார்.

இவர்கள் இருவரும் ஏற்றிய திருவிளக்காலே மன்னிய பேரிருளானது மாண்டு போக, திருக்கோவலூர் மாயனைக் கண்டு,

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் – என்னாழி வண்ணன் பால் இன்று”
என்று தொடங்கி மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களை ஸ்ரீ பேயாழ்வார் மங்களாசாசனம் பண்ணினார்.

பின்னர் மூவரும் திவ்யதேச யாத்திரைகள் சென்று, அந்திம காலத்தில் மீண்டும் திருக்கோவலூர் வந்து அடைந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்களாம்.

பொய்கையாழ்வார் – பூதத்தாழ்வார் – பேயாழ்வார் திருவடிகளே சரணம்.

thirukanden1

பாசுரம்:
“திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன்
திகழும் அருக்கன்
அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்
புரிசங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று!”

பாசுர விளக்கம்:
எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம்பெற்ற இப்பொழுது கடல்வண்ணனான எம்பெருமானிடத்திலே பெரிய பிராட்டியாரை ஸேவிக்கப்பெற்றேன், அழகிய திருமேனியையும் ஸேவிக்கப் பெற்றேன்.
விளங்குகின்ற ஸூர்யன்போன்று உஜ்வலமான நிறமும் ப்ரகாசத்தையும் ஸேவிக்கப்பெற்றேன்.
யுத்த பூமியிலே பராக்ரமங்காட்டுகின்ற அழகிய திருவாழியையும திருக்கையில் ஸேவிக்கப்பெற்றேன்.
வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே) ஸேவிக்கப்பெற்றேன்.

Pasuram Meaning (English):

“Today I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord.

He wields a fiery discus and a dextral conch in his hands. 

He has the radiance of the golden sun”


Leave a Reply to K Balaji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 thoughts on “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

  • Alarmel Mangai @Priya

    Nice article. Had been reciting these pasurams everyday. Thinking there should be a connect..got to know from your post today. Very informative in simple language

    • krishna Post author

      Namaskaram, Dhanyosmi for the comments and feedback. Great to know that Devareer reciting this pasuram everyday.
      Yes, pasuram is blissful and it was a modest attempt by Adiyen in glorifying Azhwar’s pasurams. We recite this entire Moonram thiruvanthathi regularly at Muthal Azhwargal Sannidhi, here at Srirangam Temple.
      Adiyen sharing a couple of interesting videos related to this Pasuram for your pleasant anubhavam.
      1. திருக்கோவலூர் இடைகழி வைபவம் held at Shri Kesava perumal temple, Mylapore. This Vaibhavam is held on the 3rd day of Shri Peyazhwar utsavam (Usually comes in October month)
      https://www.facebook.com/sarathy.mn/videos/1493001314115928

      2. Thirukkovalur Vaibhavam – Short Video narrating the story.
      https://www.youtube.com/watch?v=gVRGzbSo_ag

      – Adiyen Kannan Ramanuja Dasan
      https://www.facebook.com/kannan.iit

  • வ.க.கன்னியப்பன்

    இது ஒரு அருமையான,

    இரு விகற்ப நேரிசை வெண்பா

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
    அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
    என்ஆழி வண்ணன்பால் இன்று!

    இந்த வடிவத்தில் பார்த்தால் பாடலின் அழகே அழகு!

    • krishna Post author

      தன்யோஸ்மி.
      பாடலின் வரிகளை ஸ்ரீரங்கம் கோவிலில் சேவிக்கும் விதத்தில் பதிவிட்டிருந்தேன்.

  • K Balaji

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி. எம்பெருமான் கோவிந்தன் திருவடிகளே சரணம் 🙏